தற்போதெல்லாம் ஒரு கமராவை முன்னுக்கு வைத்துவிட்டு அதுக்குமுன்னால நின்றுகொண்டு படம் பற்றி கதைப்பவர்கள் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். ஒரு படத்தை யார்வேணும்னாலும் பார்த்து தனது கருத்தை தெரிவிக்கலாம். ஆனா சில நபர்கள் தம்மை ஒரு சினி ஆய்வாளராக காட்டிக்கொள்வதற்காக தமக்கு பிடித்தமாதிரி நடிகர்களுக்கு எந்தெந்த ஏரியால எப்பிடி மார்க்கெட், வசூல் கணக்கு, கற்பனை செய்திகளை டுவீடரில் பதிவேற்றி கணிசமான followers ஐ பெறுகிறார்கள்.
குறிப்பாக அஜித்-விஜய் இந்த இரண்டு நடிகர்களில் ஒருதரப்புக்கு சாதகமாகவும் மற்றயவரை எதிர்த்தும் போட்டால் கிட்டத்தட்ட 3000 - 10000 followers ஐ டுவீட்டரில் பெறலாம். இவ்வாறு ஒரு போலியான இமேஜை பெற்றுவிட்டு படங்களை தாறுமாறாக விமர்சனம் செய்வது இவர்களுக்கு பொழுதுபோக்கான விடயம்.
அண்மையில் பிரஷாந்த் என்ற நபரின் "என்னை அறிந்தால்" படத்துக்கான விமர்சனத்தை படித்தால் சுலபமாக உணர்ந்துகொள்ளலாம் இவர் ஒரு அஜித் எதிர்ப்பாளர் என்று. அதுபோக அப்படத்தில் உள்ள குறையென்று இவர் சொன்ன காரணங்களை பார்த்தால் இவர் பேரரசு பட பாணியிலான படங்களையே விரும்பி ரசிக்கிறார்போல தோணுது. இது பல அஜித் ரசிகர்களை ஆவேசமடைய வைத்துவிட்டது.
சற்றுமுன்னர் பேஸ்புக்கில் பரவும் ஒரு ஸ்கிரீன் ஷார்ட் இது.
0 comments:
Post a Comment