↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 6,232 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதனையடுத்து திமுக வேட்பாளர் ஆனந்தன் 2,010 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சுப்ரமணியன் 140 வாக்குகளும் பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை 422 வாக்குகள் பெற்றுள்ளார். ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்த இந்த வாக்குப் பதிவின்போது, 81.83 சதவீத வாக்குகள் பதிவாகின.

பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், திருச்சி - மதுரை சாலையில் பஞ்சப்பூரில் உள்ல சாரநாதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 14 மேஜைகள் போடப்பட்டு அதில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

இத்தேர்தலில் அதிமுக சார்பில் எஸ். வளர்மதி, திமுக சார்பில் என். ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாதுரை, பாஜக சார்பில் சுப்பிரமணியம், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அதிமுக - திமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவியது. கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து ஜெயலலிதா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவி பறிபோனது. இதையடுத்தே அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top