குடும்ப ஆட்சியே தாங்கள் படுதோல்வி அடைய வழிவகுத்தது என்ற குற்றச்சாட்டை, முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
அவரது தந்தை மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையே உள்ள நெருக்கமான பின்னப்பட்ட உறவுவே இலங்கையில் போரை முடிக்கக் காரணமாக இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே நாமல் இவ்வாறு கூறியுள்ளார்.
என் தந்தை அரச தலைவர்களுடன் சேர்ந்து வலுவான முடிவுகளை எடுக்க முடிந்தது, ஆனால் ஒரு தலைவருக்கு தான் நம்பக் கூடிய ஒருவர் அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நாம் ஒருவரை ஒருவர் நம்பினோம் எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியின் புதல்வராக இருந்தது தவறா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை கடந்த 9ம் திகதி தேர்தல் முடிவுகள் வௌியாகிக் கொண்டிருந்தவேளை, தனது இல்லத்தில் முக்கிய நபர்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் அவரச நிலையை பிரகடனம் செய்வது குறித்து ஆராய்ததாக வௌியாக குற்றச்சாட்டையும் நாமல் இதன்போது மறுத்துள்ளார்.
0 comments:
Post a Comment