மகிந்த தானாக விரும்பி அறிவித்த தேர்தலைப் பயன்படுத்தி அவரை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் இந்தியாவே முன்னிலை வகித்தது.
சீனாவின் நீர்மூழ்கி கொழும்பிற்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்தமை இந்தியாவின் இறையாண்மையை பாதித்ததே அதற்கான காரணம் என நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
ஆனால் தற்போதைய அரசு சீனாவின் இலங்கையில் முன்னெடுக்கப்படும் எந்தத் திட்டத்தையும் நிறுத்தாது. அவை தொடரும். ஆனால் இராணுவ நோக்கங்களிற்கு இந்தியாவைச் சார்ந்து இலங்கை செயற்படும்.
அமெரிக்கா தேர்தல் தினத்தன்று காலை இராஜங்கச் செயலர் மூலம் நேர்மையான முறையிலான தேர்தலிற்கு வேண்டுகோள் கொடுத்து மென்மையான அழுத்தத்தைக் கொடுப்பதற்கும் நீர்மூழ்கி விவகாரமே காரணம். இலங்கையில் இருந்து சிலநூறு கடல்மைல்களில் அமெரிக்காவின் பெரிய தளமிருக்கிறது.
மகிந்த தேர்தலிற்கு அடுத்தநாள் அதிகாலை அலரி மாளிகைக்கு சட்டமா அதிபர், இராணுவத்தளபதி, பொலிஸ்மா அதிபர் ஆகியோரை அழைத்து சதியொன்றில் ஈடுபட முனைந்தார் என்று தற்போதைய அரசால் உத்தியோகபூர்வ விசாரணைக்கு கோரப்பட்டுள்ளது.
இது தேர்தலிற்கு அடுத்த நாள் வரையிலும் அலரி மாளிகையில் ராஜபக்ச சுதந்திரமாக இயங்கினார் என்பதையும், எந்தவொரு நாடும் அலரி மாளிகையோ, மகிந்தாவையோ கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என பல தகவல்களைப் பகிர்ந்தார்.
0 comments:
Post a Comment