தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றிலும், பல சமூக வலைத்தளங்களிலும் மிகவும் புகழ் பெற்ற ஒரு வசனம் 'என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா' என்பது அனைவரும் அறிந்ததே. இதனையே பல்லவியாக வைத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரஜினி முருகன்' படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் டி.இமான் கம்போஸ் செய்துள்ளார் என்ற செய்தியை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்.
தற்போது இந்த பாடல் மதுரையில் படமாக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்த பாடலுக்கு நடனம் ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.
0 comments:
Post a Comment