கமல்ஹாசன் நடித்த 'உத்தமவில்லன்' படத்தின் ரிலீஸ் பிப்ரவரியில் இருக்கும் என கமல் ரசிகர்கள் உள்பட அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
சமீபத்தில் ரிலீஸான உத்தம வில்லன் படத்தின் டிரைலர் ஆடியன்ஸ்களிடன் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை அடுத்து படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு கால அவகாசம் அதிகம் தேவை என்ற காரணத்தால் படத்தில் ரிலீஸ் தேதிக்கு ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்குவதாலும், அதையடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு தேர்வு தொடங்குவதாலும் பிப்ரவரியில் ரிலீஸ் செய்வது பொருத்தமாக இருக்காது என்றும் ஏப்ரல் மாதம்தான் சரியான நேரம் என தயாரிப்பு நிறுவனம் கருதுவதாக கூறப்படுகிறது.
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, பார்வதி நாயர், மற்றும் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் என்.லிங்குசாமி மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
0 comments:
Post a Comment