தமிழக இளைஞர்கள் பலரின் டப்பிங் வாய்ஸாக இருப்பவர் தான் சந்தானம். வடிவேலு, விவேக் என அனைவரும் சினிமாவில் பின் வாங்க மார்டன் கவுண்டமணியாக மன்மதன் படத்தில் சந்தானத்தை அறிமுகப்படுத்தினார் சிம்பு.
இதற்கு முன் சந்தானம் ஒரு முன்னணி தொலைக்காட்சியில் படங்களை கிண்டல் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார், இதனால் மக்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா? என்று அவரிடம் ஒரு வருத்தம் இருந்தது. ஆனால், திறமை இருந்தால் நாங்களை யாரை வேண்டுமானாலும் வரவேற்போம் என சந்தானத்தை ஏற்றுக்கொண்டனர் தமிழக மக்கள்.
இதை தொடர்ந்து இவர் வல்லவன், சச்சின், உனக்கும் எனக்கும், இதயத்திருடன் என பல படங்களின் வந்து போக கதாபாத்திரத்தில் நடித்தாலும், ராஜேஷ் இயக்கத்தில் இவர் நடித்த சிவா மனசுல சக்தி படம் தான் இவரின் திரைப்பயணத்தையே புரட்டிப்போட்டது.
அதன் பிறகு பாஸ்(எ)பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிறுத்தை, கண்டேன் காதலை, என்றென்றும் புன்னகை என பல படங்களின் தன் கவுண்டன் வசனத்தால் அட்ராசிட்டி செய்து விட்டார். அதிலும் குறிப்பாக ‘ நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா, ஜாங்கீரி, பூந்தி, கெட்டப்பய சார் இந்த பால்சாமி’ போன்ற வசங்கள் இன்றும் சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் மைண்ட் வாய்ஸாக இருக்கிறது.
மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா முதல் வளர்ந்து வரும் நடிகர்களான சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால் என அனைவருடனும் இணைந்து நடித்த ஒரே நடிகர் இவர் தான். மேலும், காமெடி நடிகர் என்றில்லாமல் ஒரு நடிகனாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் களம் இறங்கி வெற்றி பெற்றார்.
இதேபோல் என்றும் இவர் திரைப்பயணம் உச்சதிலேயே இருக்க வாழ்த்துக்கள். Happy Birthday Comedy Superstar Santhanam ....
0 comments:
Post a Comment