அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை உண்மையிலேயே சுட்டுக்கொன்றது யார் என்பதில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் (Abbottabad) உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்கா இராணுவ வீரரான ராப் ஓ நீல்(Rob O'Neill Age-38) என்பவர் சுட்டதாக நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த மேத்யூ பிசானேட் (Mathew Bissonnette) என்ற மற்றொரு வீரர் கூறுகையில், “ராப் ஓ நீல், பின்லேடன் அறைக்குள் செல்வதற்கு முன்பாகவே இரண்டு வீரர்கள் நுழைந்து விட்டனர் என்றும் அவர்களில் ஒருவர்தான் முதலில் பின்லேடனை சுட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பின்லேடனை வீழ்த்தியது தொடர்பாக கடந்த 2012ம் ஆண்டில், ‘எளிதான நாளாக இல்லை’ (No Easy Day) என்ற பெயரில் புத்தகம் எழுதிய மேத்யூ பிசானேட், அதில் பின்லேடனை உண்மையிலேயே சுட்டுக்கொன்றது யார் என்பதை குறிப்பிடாததால் இந்த சர்ச்சை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment