அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் தான் சாகும் வேளையில் பயந்து நடுங்கியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் (Abbottabad) உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை நேருக்கு நேர் பார்த்து அமெரிக்காவின் ‘சீல்’ (Seal)படை இராணுவ வீரர்கள் மூவர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்நிலையில் பின்லேடனை தலையில் 3 முறை சுட்டுக் கொன்ற ராபர்ட் ஓ நீல்(Robert O Neil)அவரின் கடைசி நிமிடங்கள் குறித்து விவரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் பின்லேடன் இருக்கும் அறைக்குள் புகுந்த போது அங்கிருந்த அவர் என்னைப் பார்த்து அதிர்ந்து விட்டார்.
தனது மனைவிக்குப் பின்னே போய் பதுங்கிய பின்லேடன், நான் அவரைத் தாக்குவதிலிருந்து தப்பிக்க முயன்றதுடன் தனது துப்பாக்கியையும் எடுக்க முயற்சித்தார்.
கடைசி நேரத்தில் பயந்து போய் காணப்பட்ட பின்லேடனை நான் தாக்குதல் நடத்த விடமால் மூன்று முறை அவர் தலையில் சுட்டேன். அவரும் பயத்திலேயே மரணத்தை தழுவினார் என கூறியுள்ளார்.
மேலும் பின்லேடனை சுட்டது நான் தான் என்று வேறு சிலரும் கூறுவதை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும், இது தங்களது இராணுவ குழுவிற்கு கிடைத்த வெற்றி எனவும் நீல் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment