அவுஸ்திரேலியர்கள் பாலியல் அனுபவங்களை பெற்று வருகின்ற போதிலும், தாம்பத்தியத்தில் ஈடுபடுவது மிகக் குறைவென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் உறவுகள் மீதான அவுஸ்திரேலிய ஆய்வு என்ற பெயரில் இரண்டாவது தடவையாகவும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
16 இற்கும், 69 இற்கும் இடைப்பட்ட வயதுடைய 20,000 பேர் வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
2012 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 2013 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆண்-பெண் உறவுகளை ஆராய்ந்தால், பல தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபடும் சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பேராசிரியை ஜூலியட் ரிச்டெர்ஸ் தெரிவித்தார்.
இது மக்களின் இல்வாழ்க்கைக்குள் வேலை ஊடுருவியதால் நிகழ்ந்த விளைவென நாம் எண்ணுகிறோம். படுக்கையறைக்கு செல்வதற்கு முன்னதாக வேலையுடன் தொடர்புடைய மின்னஞ்சல்களைப் பார்ப்பது, உங்களது கையடக்கத் தொலைபேசியையும் மடிக் கணனியையும் படுக்கையறைக்குள் எடுத்துச் செல்வது, கூட்டாக செய்வதை விடுத்து தனியாக கேளிக்கை தரக்கூடிய விடயங்களில் அதிகமாக ஈடுபடுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம் என்றார் அவர்.
பெரும்பாலான ஆண்- பெண் உறவுகளில், கூடுதலாக உறவு வைத்துக் கொள்வதில் இருவரும் நாட்டம் கொண்ட போதிலும், பொதுவாக ஆணின் விருப்பத்திற்கு அமையவே கூடுதலான தடவைகள் உறவுகள் இடம்பெறுவதாக பேராசிரியை ஜூலியட் ரிச்டெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment