எகிப்த் நாட்டில் ஆண் பேருந்து ஓட்டுநர் ஒருவர் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவ சோதனை ஒன்றில் கூறியதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்த்தில் ஆண் பேருந்து ஓட்டுநர் ஒருவர், மது அருந்தி உள்ளாரா என கண்டறிவதற்காக மருத்துவமனையில் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்கு இவர் தனது சிறுநீரை கொடுக்காமல் தனது மனைவியின் சீறுநீரை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவர்களுக்கு பரிசோதனையில் இது கர்ப்பிணியின் சிறுநீர் என்பது தெரியவந்துள்ளது.
எனவே மருத்துவர்கள் ஓட்டுநரிடம் இது உங்களுடைய சீறுநீரா என கேட்டுள்ளனர். அப்போது அந்த ஓட்டுநர் இது என்னுடையது தான் என கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து ஓட்டுநர் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.
பின்னர் ஓட்டுநரின் மனைவி இரண்டு மாதங்கள் கர்ப்பமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எகிப்தில் போதை பொருட்களால் வருடத்திற்கு 12,000க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment