கேள்வி: உன்னை கொடு என்னை தருவேன் படத்தின் இயக்குநருக்கு வீடு வாங்கி தருவதாக சொன்னீர்களா?
பதில்: இல்லை. உன்னை கொடு தருவேன் படம் வெற்றிபெற்றால் புது காரோ அல்லது அதற்கு ஈடான தொகைக்கு அவர் விரும்பும் வேறு எதாவது வாங்கி தருகிறேன் என சொல்லியிருந்தேன்.
அது மட்டுமல்ல……கவி காளிதாசுக்கு வாய்ப்பு தரும் போது நிறைய ஆலோசனையும் சொல்லியிருந்தேன். சூப்பகுட் பிலிம்ஸ், அஜீத், சிம்ரன், எஸ்,ஏ.ராஜுகுமார் இப்படி நல்ல டீம் உங்களுக்கு கிடைச்சுருக்கு. ஆனாலும் சினிமாவில் ஜெயிப்பது அத்தனை எளிதல்ல. உங்க சொந்த ஊருக்கு போங்க 6 மாசம் நல்லா ரெஸ்ட் எடுங்க, உங்க கதைக்கான ஸ்கிரிப்ட்டை மெருகேத்துங்க, எப்ப வேனா என் கால்ஷீட் தரேன்னும் சொல்லித்தான் அனுப்பி வச்சேன்.
கேள்வி: அடுத்து நடிக்க போகும் படங்கள்?
பதில்: சிட்டிசன்……..இயக்குநர் சரவண சுப்பையாவின் இயக்கத்தில், என் நண்பரும் என்னை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவருமான சக்கரவர்த்தியின் தயாரிப்பில் வர போகும் படம்.
சில காரனங்களால்……இயக்குநர் பாலாவின் நந்தா படத்துல நடிக்க முடியாத்துனால…..அதற்கு பதிலாக இயக்குநர் வசந்தின் இயக்கத்தில், என்னை சினிமாவுக்கு அறிமுக படுத்திய தெலுங்கு பட தயாரிப்பாளரான பூர்ன சந்திரராவின் தயாரிப்பில் நடிக்க போகும் படம்.
இயக்குநர் வசந்துக்கும் எனக்கும் சில முரன்பாடுகள் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போ ரெண்டுப்பேருமே எங்களை புரிஞ்சுக்கிட்டோம். என் தவறுகளை நான் புரிஞ்சு திருத்திக்கிட்டேன். இனி வசந்த் படத்துல நடிக்கவே மாட்டேன் அது ஆஸ்கார் விருது கிடைக்கும் மாதிரியான கதையா இருந்தா கூடன்னெல்லாம் பேட்டி கொடுத்தேன்…….அதெல்லாம் மன்னிச்ச என் குருவும், என்னை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திய இயக்குநர் வசந்துக்கு என் நன்றிகள். எனக்கு ஆலோசனை சொல்லவும் திருத்தவும் அவருக்கு உரிமை இருக்கு.
அடுத்தது, இயக்குநர் எழில் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரனின் நடிக்க போவது, இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கத்தில் என் நண்பர் கார்த்திகேயனுக்காக ஒரு படம், பின்ன இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் படத்துல நடிப்பதா சொல்லியிருக்கேன்.
கேள்வி: விஜயோட சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக சொல்றாங்களே?
பதில்: நல்ல கதையும், நாங்கள் அதுல நடிக்க வேண்டிய வாய்ப்பும் சூழ்நிலையும் வந்தால் நடிக்க நான் தயார், ஆனால் அந்த கதை அவருக்கும் பிடிக்கனும். இப்போ வரைக்கும் அதுமாதிரியான வாய்ப்பு ஒன்னும் வரலை.
கேள்வி: திரும்பவும் படம் தயாரிக்க, வெளியிட விருப்பம் இருக்கா?
பதில்: இல்லை. அதுக்கான நேரமும் இல்லை. என்னோட வேலை, எனக்கு தெரிஞ்ச வேலை சினிமாவில் நடிப்பது மட்டுமே. அதன் மூலம் தயாரிப்பாளரயும், சினிமா ரசிகர்களையும் திருப்தி செய்யவே என் முழு கவனத்தையும் செலுத்த விரும்பிகிறேன்…
0 comments:
Post a Comment