வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில், 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இன்று நடக்கும் உலகக் கிண்ண 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து- வங்கதேச அணிகள் விளையாடுகின்றன.
டொஸ் வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் இயான் மார்கன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால்(2), இம்ருல் கெய்ஸ்(2) ஏமாற்றினர்.
பின் இணைந்த சவுமியா சர்கார், மகமதுல்லா ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ஓட்டங்கள் சேர்த்த போது சர்கார்(40) ஆட்டமிழந்தார், சாகிப் அல் ஹசனும்(2) ஏமாற்றினார்.
ஆனால் மகமதுல்லா பொறுப்பாக விளையாடி 103 ஓட்டங்கள் எடுத்தார், அதாவது உலகக் கிண்ண வரலாற்றில் முதல் சதமடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார்.
முடிவில் வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்கள் எடுத்தது.
வெளியேறியது இங்கிலாந்து
276 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி(19) ஏமாற்றினார், அலெக்ஸ் ஹேல்ஸ்(27) நிலைக்கவில்லை. தொடர்ந்து ஜோ ரூட்(29), அணித்தலைவர் மார்கன்(0), ஜேம்ஸ் டெய்லர்(1) ஏமாற்றினர்.
பொறுப்பாக ஆடிய இயான் பெல்(63), ஜாஸ் பட்லர்(65) அரை சதமடித்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொதப்பவே, 48.3 ஓவரில், 260 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த போட்டியில் தோற்றதால் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து இங்கிலாந்து பரிதாபமாக வெளியேறியது.
0 comments:
Post a Comment