↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஆரோக்கியமான வாழ்வு மற்றும் உடல் எடை குறைப்பு போன்றவற்றிற்கு பழங்களைத்தான் நாம் முதலில் எடுத்துக்கொள்கிறோம்.
பழங்களில் இயற்கை சர்க்கரை அதிகம் இருக்கிறது. இத்தகைய சர்க்கரையை சரியாக கவனிக்காமல் இருந்தால், சர்க்கரையானது கொழுப்புக்களாக மாறிவிடும்.
பழங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாகவும் மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது.
அதனால் தான் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பழங்களை சாப்பிட சொல்கின்றனர். மேலும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும்.
பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை தான் புருக்டோஸ். இது உடலினுள் செல்லும் போது, சுக்ரோஸ் மற்றும் கிளைகோஜெனாக மாற்றப்படும். சுக்ரோஸ் என்பது பதப்படுத்தப்பட்ட சர்க்கரையை விட 1 1/2 மடங்கு அதிக இனிப்பாக இருக்கும்.
மேலும் இது மெதுவாக உடலால் உறிஞ்சப்படும். எனவே பழங்களை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.
சில பழங்களில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அதிலும் சிறிய வாழைப்பழத்தில் 105 கலோரிகளும், ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் 46 கலோரிகளும் உள்ளது.
எனவே இவற்றை உட்கொண்டு வரும் போது, உடற்பயிற்சிகளை செய்யாவிட்டால், உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
மருந்துகளை எடுத்து வரும் நோயாளிகள், சில பழங்களை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிலும் நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.
வாழைப்பழம், திராட்சை மற்றும் மாம்பழம் போன்றவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இவற்றை தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, தர்பூசணி, உலர் திராட்சை போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிக அளவில் உள்ளது.
பழங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.
பெரும்பாலான நேரங்களில் பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை ஜூஸ் அல்லது இனிப்பு பண்டங்களில் சேர்த்தோ உட்கொள்ள சொல்வார்கள்.
ஏனெனில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ள பழங்களை அதிகம் உட்கொள்ளும் போது, அவை தொப்பையை அதிகரித்து, உடலின் மெட்டபாலிசத்தைக் குறைத்துவிடும்.
உடலின் மெட்டபாலிசம் குறைந்தால், அது உடல் பருமனை ஏற்படுத்திவிடும். எனவே எடையை குறைக்க நினைப்போர் உலர் திராட்சை, பேரிச்சை போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top