‘லிங்கா’ படத்தால் தன் இமேஜுக்கு ஏற்பட்ட டேமேஜை சரி செய்தாக வேண்டிய கட்டாயத்தில் ரஜினி இருக்கிறார்.
பிரம்மாண்டமான வசூலை ‘ஐ’ படம் செய்திருந்தாலும் படத்தைத் தயாரித்து வெளியிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ்சுக்கு பெரிய லாபமில்லை. உடனடியாக பிரம்மாமண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுக்க அந்த நிறுவனம் தயாராகிவிட்டது.
தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்டாலின்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்பது ஆஸ்கர் நிறுவனத்தின் நீண்ட நாள் கனவு.
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க, ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவது என முதல் கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் இந்த படத்தை வினியோகஸ்தர்களுக்கு அவுட்ரேட் முறையில் விற்க கூடாது, எம்ஜி அடிப்படையில் தியேட்டருக்கு தரக் கூடாது, ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனமே நேரடி வெளியீடாக படத்தை திரையிட வேண்டும் என ரஜினிகாந்த் முக்கிய கோரிக்கை வைத்துள்ளாராம்.
0 comments:
Post a Comment