‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டைத் தாண்டி படப்பிடிப்புக்கான செலவு அதிகரித்து வருவதாகத் தகவல்.
கோடை விடுமுறைக்கு வரும் என தொடங்கப்பட்ட போது வெளியீடு பற்றி கூறப்பட்டது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் ஜுன் முதல் வாரம்தான் ‘புலி’ வெளிவர உள்ளதாம்.
விடுமுறையை மனதில் வைத்து வியாபாரம் பேசிய வினியோகஸ்தர்களும் விலையை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கத் தொடங்கிவிட்டார்கள் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் 7 ஏரியாக்கள் மட்டுமே விலை பேசப்பட்டு வியாபாரம் முடிந்துள்ளது. திருச்சி, நெல்லை, வட இந்தியா, வெளிநாடு, தொலைக்காட்சி ஆகிய உரிமைகள் இன்னும் முடியவில்லை.
சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு ஆகிய ஏரியாக்களை மொத்தமாக 21 கோடி ரூபாய் கொடுத்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
மதுரை ஏரியாவை நெல்லை மணிகண்டன் 5.25 கோடி ரூபாய்க்கும், கோவை ஏரியாவை காஸ்மோஸ் சிவக்குமார் 9 கோடி ரூபாய்க்கும், சேலம் ஏரியாவை அசோக் சாம்ராட் 4 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளனர்.
0 comments:
Post a Comment