↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் சரித்திர சாதனை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். அந்த கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது முதலமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் 'டர்ட்டி பாலிடிக்ஸ்' என்ற அரசியல் பின்னணி கொண்ட படத்தை இயக்கி வரும் பி.சி.பொகாடியா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரவிந்த் கெஜ்ரிவாலை அணுகி, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தான் அரசியல் பணிகளில் பிசியாக இருப்பதால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. பின்னர் இந்த கேரக்டரில் நஸ்ருதீன்ஷா ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான அரசியல் திருப்பங்கள் கொண்ட இந்த "டர்ட்டி பாலிடிக்ஸ்' திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் மல்லிகா ஷெகாவத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜாக்கி ஷெராப், அனுபம் கேர், ஓம்புரி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
Home
»
cinema
»
cinema.tamil
»
mallika
» மல்லிகா படத்திற்கு மறுப்பு தெரிவித்தாரா அரவிந்த் கெஜ்ரிவால்?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment