அஜீத், அனுஷ்கா,திரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்து வரும் 'என்னை அறிந்தால்' படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பின்னர் கவுதம் மேனன் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் இயக்கிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி வெளியானது.
3 வாரங்களில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ. 100 கோடியை தாண்டி உள்ளது. 3 வார முடிவில் என்னை அறிந்தால் ரூ.102 கோடி வசூலை தொட்டு உள்ளது.உலக அளவில் என்னை அறிந்தால் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்திய அளவில் என்னை அறிந்தால் ரூ. 73.50 கோடி வசூல் செய்து உள்ளது. வெளிநாடுகளில் ரூ.28 கோடி வசூல் செய்து உள்ளது.தமிழ் நாட்டில் மட்டும் ரூ.60.5 கோடி வசூல் செய்து உள்ளது. கர்நாடகாவில் ரூ.6. 3 கோடியும்,கேரளாவில் ரூ.5.30 கோடியும் வசூல் செய்து உள்ளது.
என்னை அறிந்தால் படத்திற்கு அமெரிக்கா , இங்கிலாந்து நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.
சென்னை பாக்ஸ் ஆபீசில் ரூ.5.75 கோசூல் செய்து இருந்தது.கடந்த வாரங்களில் என்னை அறிந்தால் 425 காட்டிகள் ஓடியது. அதிகார பூர்வ அறிவிப்புதான் படத்தின் வணிகம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும்.
இப்படம் வரவேற்பைப் பெற்றால் படத்தின் இரண்டாம் பாகத்தினை திட்டமிட்டு இருப்பதாக கவுதம் மேனன் முன்பே தெரிவித்து இருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதால் என்னை அறிந்தால்- பாகம் 2 எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் அஜித் அடுத்ததாக சிறுத்ட்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே அஜித்தின் வீரம் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் மாபெரும் வெற்றியடைய, இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளது. தற்போது இதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் அஜித் மீண்டும் சால்ட் -பெப்பர் லுக்கில் வந்தாலும் இன்னொரு வேடமும் உள்ளதாம், அந்த கேரக்டர்க்கான டிசைன்களை தான் தற்போது சிவாவும் மற்றும் அஜித்தும் சேர்ந்து ஆலோசனை செய்து வருகிறாராம். இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். கமலின் மகள் ஸ்ருதிஹாசன். படத்தில் இரட்டை வேடம் என்றால் மற்றொரு கதாநாயகி பிந்து மாதவியாக இருக்கும் வாய்ப்பு உண்டு. இந்த தகவல் தயாரிப்பு நிறுவனத்தின் நெருங்கிய வட்டார தகவல்கள்.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment