மேலும் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமும், அணியின் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதே போல் பெர்த்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அணித்தலைவர் பொறுப்பை ஏற்று இருந்த ஜார்ஜ் பெய்லிக்கு அந்த ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக அபாரதம் விதிக்கப்பட்டிருந்தது.
ஒரு ஆண்டுக்குள் இரண்டு முறை இதே மாதிரி புகாருக்கு உள்ளானால் அணித்தலைவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும். அதன் படி ஜார்ஜ் பெய்லி ஒரு ஆண்டுக்குள் மீண்டும் சிக்கியதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ஹோபர்ட்டில் வருகிற 23ம் திகதி நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜார்ஜ் பெய்லி விளையாட முடியாது. அவருக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் அணித்தலைவராக களமிறங்குவார் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment