மேற்கிந்திய தீவுகளில் 2007ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி, தோல்விகளால் உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் அணி அங்கு தங்கிருந்தது. இந்திய அணி வெளியேற்றப்பட்ட நிலையில், சச்சின், கங்குலி தங்கி இருந்த ஹொட்டல்கள் தாக்கப்பட்டன.
ஜாகீர்கானின் வீட்டில் கல் எறியப்பட்டது. டோனியின் வீட்டு உடைக்கப்பட்டது. அப்போது முனாஃப் படேலை தொடர்பு கொண்ட சச்சின்,`அனைவரின் வீடுகளும் தாக்கப்படுகிறது. உங்கள் வீட்டில் ஏதும் தாக்குதல் நடந்ததா என்று கேட்டார்’.
அதற்கு முனாஃப் சிரித்துக் கொண்டே, `நான் 8000 மக்களுடன் தங்கி இருக்கிறேன். அவர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என்றார். உடனே அப்போ நாங்களும் வந்து விடலாமே என்றார் சச்சின்.
2011ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி கிண்ணம் வெல்ல முக்கிய பங்காற்றிய முனாஃப் படேல், இந்த உலகக்கிண்ணப் போட்டியில் காணமலே போய் விட்டார்.
முனாஃப் படேலின் ஏழ்மை
குஜராத்தில் இக்கார் என்ற கிராமத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் பிறந்தவர் முனாஃப். 1990ம் ஆண்டு அந்த கிராமத்தில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.
ஆரம்பத்திலே வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய அவருக்கு கிரிக்கெட் விளையாட ஆர்வமில்லை. ஏழ்மையான நிலை, வீட்டில் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அப்பா ஏழை விவசாயி.
விடுமுறை தினங்களில் டைல்ஸ் கம்பெனியில் 8 மணி நேரத்திற்கு ரூ.35 என்று வேலை பார்த்து குடும்ப நிலையை சரி செய்வார். `அப்பா மட்டுமே சம்பாதிக்கிறார். நானும் வேலைக்கு போனால் தான் கூடுதல் பணம் கிடைக்கும்’ என்பார்.
இது அவரது ஆசிரியருக்கு தெரிய வரவே, வேலைக்கு சென்றால் படிக்க வரவேண்டாம். வேலை வேண்டாம் விளையாட வா என்று அழைத்தார்.
இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்த முனாஃப் படேலுக்கு, அவரது கிராமத்தில் யூசுப் பாய் என்ற பயிற்சியாளர் அறிமுகம் கிடைக்க கிரிக்கெட் பயணம் ஆரம்பமானது.
செப்பலுடன் விளையாடும் முனாஃப்க்கு முதன் முறையாக யூசுப் பாய் ஷூ வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
அப்பாவின் வருத்தம்
முனாஃப் அப்பாவுக்கு இதில் கொஞ்சமும் நாட்டமில்லை. விளையாட்டை தூக்கிப் போட்டு விட்டு வறுமை நிலையை போக்க தன்னுடன் வேலைக்கு வருமாறு அழைப்பார். ஆனால் நீ பொறுமை காத்திரு..விளையாடப் போ என்பார் அவரது அம்மா.
அதே சமயம் முனாஃப், `அப்பாவை குறை சொல்லக் கூடாது. இங்கு விளையாட்டால் என்ன கிடைக்கப் போகிறது என்று யாருக்கும் தெரிவில்லை. அதனால் பணம் கிடைக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது’ என்பார்.
கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாத கிராமத்தில் இருந்து சாதனை பயணத்திற்கு புறப்பட்டார் முனாஃப்.
சென்னையின் காதல்
முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண், திறமையை மட்டுமே கட்டணமாக வாங்கிக் கொண்டு அவரது அகாடமில் முனாஃப்க்கு பயிற்சியளித்தார். பின்னர் சென்னையில் உள்ள ‘MRF pace school’ க்கு அனுப்பி வைத்தார்.
தெரியாத மொழி, ஆட்டோ சண்டை ஆகியவை அவருக்கு வித்தியாச உணர்வை கொடுத்தாலும், சென்னை அவரை அரவணைத்ததாக தெரிவிப்பார்.
அங்கு 5 மாதங்கள் பயிற்சி பெற்ற முனாஃப், கையுறையை எப்படி மாட்ட வேண்டும், எப்படி பேச வேண்டும் என்ற சிறு விடயங்களையும் கற்றார்.
இந்நிலையில் பயிற்சியின் போது அங்கு இங்கிலாந்து வீரர்களை அவரின் வேகப்பந்து பதம் பார்த்தது.
இவரின் திறமையை கண்டு வியந்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாக், சச்சினுடன் பேசி அவரை மும்பை ரஞ்சி அணியில் சேர்த்தார்.
மறக்கடிக்கப்பட்ட முனாஃப்
ரஞ்சிப் போட்டியில் அசத்திய முனாஃப் 2006ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். பலமுறை தெரிவு செய்யப்படுவதில் சோதனைக்குள்ளானார்.
2011 உலகக்கிண்ணப் போட்டியில் மிரட்டிய முனாஃப் யுவராஜ், ஜாகீர் கான் வரிசையில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக இருந்தார். ஆனால் தற்போது 2015 உலகக்கிண்ணப் போட்டியில் அவர் மறக்கடிக்கப்பட்டு விட்டார்.
0 comments:
Post a Comment