பிரித்தானியாவின் ஸ்டாபோர்ஷைர் (Staffordshire) நகரை சேர்ந்த Tareena Shaki என்ற பெண் தன் குழந்தையுடன் ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு கடந்த நவம்பரில் சிரியாவிற்கு பறந்துள்ளார்.
இதன்பின் அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் அமைப்பில் இணைந்த அவர் தன் குழந்தையுடன் செல்பி படத்தை எடுத்துக்கொண்டு, இனி நாங்கள் திரும்பிவரமாட்டோம் என்ற செய்தியை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் இணைந்தது தவறு என்பதை உணர்ந்த அவர், சிரியாவின் ரக்கா (Raqqa) நகரை கடந்து தப்பிக்க முயன்றுள்ளார்.இந்நிலையில் அவன் துருக்கி நாட்டின் எல்லையின் அருகே சென்றபோது துருக்கிய அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவரிடம் அங்கிருந்த துருக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தியதுடன் உண்மையை கூறவில்லை என்றால் சுட்டுவிடுவோம் என மிரட்டவே, தன்னையும் தன் குழந்தையும் சுட வேண்டாம் என அவர் கெஞ்சியுள்ளார்.
மேலும் தற்போது அவர் தன் தந்தையின் உதவியை நாடி, தன்னை அதிகாரிகளிடமிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பா என்னை உடனடியாக காப்பாற்றுங்கள் என்றும் இங்கே இருந்து என்னை விடுவித்து நம் வீட்டிற்கு என்னை அழைத்து செல்லுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment