↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad லா லிகா கால்பந்து தொடரில், டிபோர்டிவோ அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடிக்க பார்சிலோனா அணியின் வெற்றி உறுதியானது.
ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையிலான ஸ்பானிஷ் லீக் தொடரின் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனாவும், டிபோர்டிவோ அணியும் மோதின.
போட்டியின் ஆரம்பத்தில் சில நிமிடத்திலேயே மெஸ்ஸிக்கு ஒரு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை டிபோர்டிவோ அணியின் கோல் கீப்பர் பேப்ரிசியோ தடுத்தார். ஆனால், 11-ஆவது நிமிடத்தில் இவான் ரேகிடிச் கொடுத்த கிராûஸ அற்புதமாக தலையால் முட்டி கோல் அடித்தார் மெஸ்ஸி. பின்னர், 33ஆவது நிமிடத்தில் சக வீரர் நெய்மர் கொடுத்த பாûஸ நேர்த்தியாக கோல் கீப்பரை ஏமாற்றி மெஸ்ஸி கோல் அடிக்க, பார்சிலோனா முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது.
பிற்பாதியிலும் பார்சிலோனாவின் கை ஓங்கி இருந்தது. 62-ஆவது நிமிடத்தில் தனது இடது காலின் மூலம் தனது பிரத்யேக ஷாட் மூலம் மெஸ்ஸி கோல் அடிக்க, டிபோர்டிவோ நிலை குலைந்தது.
போட்டி முடிவதற்கு பத்து நிமிடங்கள் இருந்த போது டிபோர்டிவோ அணயின் பின்கள வீரர் சிட்னே "சேம் சைடு' கோல் அடித்தார். முடிவில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.
மெஸ்ஸி இதுவரை பார்சிலோனா அணி சார்பில் 30 ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளார். அவரை அணியின் மேலாளர் லூயிஸ் என்ரிக் ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளார். சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரியல் மாட்ரிட் அணி கெடாஃபே அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில், உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார்.
புள்ளிகள் பட்டியலில் ரியல் மாட்ரிட் 45 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பார்சிலோனா 44 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லா லிகா சாம்பியனான அட்லெடிகோ மாட்ரிட் 41 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top