கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் வினோத் குமார் (44). அரசுப் பள்ளி ஆசிரியரான இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் மறுமணம் செய்ய விரும்பிய இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு மலையாள பத்திரிகையில் மணமகள் தேவை என விளம்பரம் செய்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்து மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த ஜிஜி மேத்யூ (38) என்ற பெண், வினோத் குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் விதவை என்றும், வினோத் குமாரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறினார். இதை நம்பிய வினோத் குமார் நேரடியாக சந்தித்த பின்னர் திருமணம் குறித்து முடிவு செய்யலாம் என்றார். இதையடுத்து மறுநாள் மூவாற்றுப்புழாவுக்கு வருமாறு ஜிஜி மேத்யூ கூறியுள்ளார். இதன்படி மூவாற்றுப்புழா சென்ற வினோத் குமார், ஜிஜி மேத்யூவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். ஆனால் திருமணத்திற்கு முன் தனக்கு நகை வாங்கித் தரவேண்டும் என்று ஜிஜி மேத்யூ கூறினார். அதை ஏற்றுக்கொண்ட வினோத் குமார் கடந்த மாதம் ஜிஜிக்கு 10 பவுனில் நகை வாங்கிக் கொடுத்தார். இதன்பின் சில நாட்கள் கழித்து வினோத் குமாரை தொடர்பு கொண்ட ஜிஜி மேத்யூ, தனக்கு திருமண செலவுகளுக்காக ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என கூறினார். இதை நம்பி ஜிஜிக்கு வினோத் குமார் ரூ.1 லட்சம் கொடுத்தார். இதன் பிறகு சில நாட்கள் கழித்து ஜிஜியை வினோத் குமார் கைப்பேசியில் அழைத்தபோது அவரது போன் ஆப் செய்யப்பட்டிருந்தது. பலமுறை தொடர்பு கொண்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து வினோத் குமார் மூவாற்றுப்புழாவுக்கு சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை வினோத்குமார் உணர்ந்தார். இது குறித்து அவர் மூவாற்றுப்புழா பொலிசில் புகார் செய்தார். பொலிசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஜிஜி மேத்யூவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் இதேபோல திருமணம் செய்வதாகக் கூறி அவர் பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை, பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின் பொலிசார் ஜிஜி மேத்யூவை மூவாற்றுப்புழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். |
மறுமணம் செய்துகொள்கிறேன்: பல ஆண்களை ஏமாற்றிய ஏமாற்று ராணி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.