"கேஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்" என்ற செய்திப்படம் ஒன்று சே குவாராவை அமெரிக்க உளவு படை [Central Intelligence Agency - C.I.A] கொன்றதும், கேஸ்ட்ரோவைக் காப்பாற்ற அவரின் மெய்க்காவலர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சிகளையும் குறித்து விவரிக்கிறது.
புகைப்பிடிக்கும் வழக்கம் உடைய கேஸ்ட்ரோவிற்கு அமெரிக்க உளவு நிறுவனம் ஒருமுறை சிகார் ஒன்றில் வெடிமருந்து கலவை கலந்து அனுப்பியுள்ளது.
இன்னொரு முறை உடலில் அரிப்பை ஏற்படுத்தக் கூடிய கண்ணுக்குத் தெரியாத பூஞ்சானை கேஸ்ட்ரோவின் நீச்சல் உடையில் தூவி கொடுக்க முயன்றதாகவும் அம்முயற்சியும் தோல்வி அடைந்ததாக அவரது மெய் காப்பாளர் எஸ்கலாண்டி கூறுகிறார்.
ஒருமுறை கேஸ்ட்ரோவுக்கு உணவாக கொடுக்கப்பட்ட நத்தைக்குள் வெடிபொருளை வைத்து கொல்ல முயன்றது, மாத்திரைகளில் நஞ்சு கலந்தது, சில கூலிப்படைகளை அனுப்பி கொல்ல முயன்றது போன்ற கொலைத் திட்டங்கள் தொடர்ந்து நடந்துள்ளன.
இதனால் வெறுப்புற்ற கேஸ்ட்ரோ தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற போது சிறுகுடலில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டது.
பின்னர் கேஸ்ட்ரோவைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கே மேலும் சிலநாட்கள் ஓய்வெடுக்கவும், கேஸ்ட்ரோவின் உடலைக் பரிசோதிக்கவும் தங்கியபோதும் கூட கேஸ்ட்ரோவை கொல்ல முயற்சி எடுக்கப்பட்டதாக எஸ்கலாண்டி தெரிவிக்கிறார்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகள் இப்படி கொலை முயற்சிகள் நீடித்ததாகவும் கூறுகிறார்.
1959-ல் க்யூபா புரட்சி வெற்றி பெற்று கேஸ்ட்ரோ அதிபர் ஆனபின் கேஸ்ட்ரோவையும் அவருடைய தம்பியான ராவூல் மற்றும் புரட்சியாளரான சே குவாராவையும் கொல்ல தீவிரமாக அமெரிக்கா திட்டமிட்டதாக சொல்கிறார் எஸ்கலாண்டி.
பேனாவை வெடிக்கச் செய்வது, முகத்தில் போடும் க்ரீமில் நஞ்சு கலந்த முயற்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். கைக்குட்டைகள், டீ தூள்கள், காப்பி தூள்களில் கூட நஞ்சை கலந்து வைத்திருக்கிறது.
2000-ம் ஆண்டில் கேஸ்ட்ரோ பனாமா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தபோது, கேஸ்ட்ரோ பேசுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையின் அடியில் 90 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டை புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
இப்படி ஏகப்பட்ட கொலை திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டே இருப்பதால் கேஸ்ட்ரோவின் வாழ்க்கை முறைகள் மிகுந்த கண்காணிப்பிற்குள்ளதாக எஸ்கலாண்டி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment