கடந்த 90களில் பிரபுவும் குஷ்புவும் காதலிப்பதாகவும், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் செய்தி வெளிவந்தது. இதன்பின்னர் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர். கடந்த 1995ஆம் ஆண்டு வெளிவந்த சின்ன வாத்தியார் படத்திற்கு பின்னர் 20 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'வந்தாள்' என்ற படத்தில் பிரபு மற்றும் குஷ்பு இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக வருகிறார்களா? அல்லது தனித்தனியாக வருகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment