சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி சரியான கதை அமையாமல் அல்லாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூது கவ்வும் படம் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அனுபவமாக அமைந்தது. அது வெற்றி பெற்றதும் தனக்கொரு படம் இயக்கச் சொல்லி நடிகர் சூர்யாவிடமிருந்து நலனுக்கு அழைப்பு வந்தது. அந்த தைரியத்தில் கொரிய படமான மை டியர் டெஸ்பரடோ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பத்து லட்சத்திற்கு வாங்கினார் நலன். ஆனால், அந்தக் கதையில் நடிக்க சூர்யா மறுத்துவிட்டார். அடுத்து விஜய் சேதுபதியிடம் வந்தனர். அவரும் உதட்டைப் பிதுக்க, வேறு கதை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சூது கவ்வும் படத்தை தயாhpத்த திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சி.வி.குமாரின் தயாரிப்பில் கை நீளம் என்ற படத்தை அறிவித்தார் நலன். ஆனாலும் கதை தயாராகவில்லையாம். சமீபத்தில் தனது கதை விவாதக்குழுவுடன் சிங்கப்பூர் சென்று வந்தார். கடல் தாண்டி சென்ற பின்பும் சரியான கதை மாட்டாமல் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என்ற யோசனையில் உள்ளனர்.
0 comments:
Post a Comment