இன்று மதியம் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக செய்திகள் பல மீடியாக்களில் வெளிவந்து கொண்டிருந்தது. நடிகை த்ரிஷா தொழிலதிபர் வருண் மணியத்தை திருமணம் செய்யப்போகிறார். அடுத்த மாதம் இருவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இதுகுறித்து வருண்மணியம் சார்பாக யாரும் மறுப்பி தெரிவிக்காததால் ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்றெல்லாம் பலர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான த்ரிஷா ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தார். ஷூட்டிங்கை முடித்துவிட்டு சற்று நேரத்திற்குமுன் சென்னை வந்த அவரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் நிதானமாக பதிலளித்திருக்கிறார் “எனக்கு நிச்சயதார்த்தமும் இல்ல, கல்யாணமும் இல்ல. எனது திருமணம் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது என்பதை நான் அறிவேன், அதுபோல திருமணம் குறித்து முடிவெடுத்தவுடன் பத்திரிக்கையாளர்களாகிய உங்களிடம் இதுகுறித்து பகிர்ந்து கொள்வேன்.” என்று பதிலளித்துள்ளார்.
மேலும் தெலுங்கில் 3 படங்களில் நடித்துவரும் த்ரிஷா அடுத்த வருட இறுதிவரை படங்களில் பிசியாக இருப்பார். இந்த நேரத்தில் கல்யாணம் என்றால் அது பலருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது அவருக்கு தெரியாதா என்ன..!
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment