1979ஆம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 20) பிறந்தவர் நடிகை ஷாலினி. தனது 4வது வயதிலேயே மலையாள படத்தில் நடிக்கத் தொடங்கியவர், 6வது வயதில் ‘பந்தம்’ படம் மூலம் தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஷாலினி, தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரங்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தார்.
பின்னர், 1997ஆம் ஆண்டு ‘அனியத்தி பிராவு’ என்ற மலையாள படம் மூலம் ஹீரோயினாக புரமோஷன் பெற்றார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக, தமிழில் விஜய் நடிக்க ‘காதலுக்கு மரியாதை’யாக ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் ‘மினி’ என்ற கேரக்டரில் நடித்த ஷாலினி, தமிழிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். இங்கேயும் இப்படம் சூப்பர்ஹிட்டானது. விஜய்யின் கேரியரில் இப்படம் பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. அதன்பிறகு 1999ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் உருவான ‘அமர்க்களம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் ஷாலினி.
இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது ‘பார்த்த முதல் பார்வையிலேயே’ காதல் கொண்ட அஜித்தும் ஷாலினியும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தார்கள். 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அஜித் - ஷாலினிக்கு தமிழ்த் திரையுலகமே வாழ்த்து மழை பொழிய திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ‘கண்ணுக்குள் நிலவு’, ‘அலைபாயுதே’, ‘பிரியாத வரம் வேண்டும்’ ஆகிய 3 படங்கள் மட்டுமே ஷாலினி நடிப்பில் வெளிவந்தது.
அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தனக்கு மிகவும் பிடித்த ‘இல்லத்தரசி’ பதவியை ரசித்து ஏற்றுக் கொண்டார் ஷாலினி. தமிழ்த் திரையுலக ஜோடிகளில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அஜித்-ஷாலினி தம்பதிக்கு 2008ஆம் வருடம் ஜனவரி 3ஆம் தேதி அனோஷ்கா என்ற குட்டி தேவதையும் பிறந்தார். தற்போது அஜித்தின் 2வது வாரிசை ஷாலினி சுமந்து வருகிறார்.
படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டாலும், தான் மிகவும் ரசிக்கும் ‘பேட்மின்டன்’ விளையாடுவதை திருமணத்திற்குப் பிறகும் சந்தோஷமாகத் தொடர்ந்தார் ஷாலினி. அவருடைய விருப்பங்களில் எப்போதுமே தலையிட்டதில்லை ‘தல’.
அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை, தங்களின் ‘தல’ வேறு, ஷாலினி வேறு அல்ல... ‘தல’யை அண்ணனாக ஏற்றுக்கொண்டவர்கள், ஷாலினியை ‘அண்ணி’யாகவே கொண்டாடி வருகிறார்கள். அதனாலேயே அவரின் ஒவ்வொரு வருடப் பிறந்தநாளையும், அஜித்தின் பிறந்தநாளைப்போலவே சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் இன்றைய தினம் ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் தல ரசிகர்கள்.

..............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment