கடந்த ஐந்தாண்டுகளாக பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அசின் மீண்டும் கோலிவுட் வர முடிவு செய்திருக்கிறார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அசின், மளமளவென ஏகப்பட்ட படங்களில் நடித்தார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உட்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்த அசின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்தார்.
அமீர்கானை வைத்து கஜினி படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அப்படத்தில் அசின்தான் நாயகி. 2008ல் வெளியான கஜினி சூப்பர் ஹிட்டானதோடு, பாலிவுட்டில் அசினுக்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. தொடர்ந்து சல்மான்கான் உடன் லண்டன் ட்ரீம்ஸ், ரெடி ஆகிய படங்களில் நடித்த அசின், ஹவுஸ்ஃபுல் -2, போல் பச்சான், கில்லாடி 786 என தொடர்ந்து பல ஹிந்திப்படங்களில் நடித்தார். திடீரென அங்கே அவருக்கு பிரேக் ஏற்பட்டது.
ஹிந்திப்பட வாய்ப்பு அடியோடு குறைந்துபோனதால் 2012, 2013 இரண்டு வருடங்களில் அசின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. பார்ட்டிகளில் தவறாமல் கலந்து கொண்டு பட வாய்ப்பு பெற முயன்றார். அசினின் நீண்ட முயற்சிக்குப் பிறகு தற்போது ஆல் இஸ் வெல் என்ற பட வாய்ப்பு கிடைத்தது.
கையில் படமே இல்லாமல் மும்பையில் காலம் தள்ளுவது இனி முடியாத காரியம் என்பதால் மீண்டும் தமிழப்படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் அசின். தனக்கு நெருக்கமான ஹீரோக்களுக்கு வாட்ஸ் அப்பில் தூது விடுகிறாராம்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment