↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த ஷாருக்கான்-சல்மான்கான் ஆகிய இரு பாலிவுட் ஜாம்பவான்களின் நட்பு, ஒரு திருமணத்தால் இன்று கைகூடியுள்ளது. இதனால் பாலிவுட் வட்டாரத்தில் இரு பெரும் நடிகரின் ரசிகர்களும் ஆனந்த கூத்தாடி வருகின்றனர். பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்களாக உள்ளவர்கள் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான். 2008ம் ஆண்டு நடிகை கத்ரினா கைப் பிறந்தநாள் விழாவின்போது இவ்விரு ஹீரோக்களும் உரசிக் கொண்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு இருவருக்கு இடையேயான நட்பு துண்டிக்கப்பட்டிருந்தது. சல்மான், ஷாருக் ரசிகர்களும், நம்மூர், அஜீத்-விஜய் ரசிகர்களை போல உரசியபடி சுற்றித் திரிந்தனர். இந்நிலையில்தான், ஒரு திருமணம் இரு 'கான்களையும்' ஒன்று சேர்த்துள்ளது. சல்மான்கானின் தங்கை அர்பிதாவுக்கு நாளை செவ்வாய்க்கிழமை ஹைதராபாத் ஃபலக்னாமா பேலஸில் வைத்து திருமணம் நடைபெறுகிறது.

இதையொட்டி, மும்பையிலுள்ள, சல்மான்கான் வீட்டுக்கு நேற்றிரவு வந்த ஷாருக், அர்ப்பிதா தலைமீது முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அப்போது உடனிருந்த சல்மானும் தனது தங்கையின் தலையில் முத்தம் கொடுத்துள்ளார். இரு கான்களும் ஒரே நேரத்தில், அர்பிதா தலையில் முத்தமிட்டு ஆசி வழங்கும் போட்டோவை சல்மானின் மைத்துனர் அதுல் அக்னிகோத்ரி தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த படம் இப்போது ஆயிரம் ரீடிவிட்டுகளை நெருங்கி சென்று கொண்டுள்ளது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுகளில் மும்பையில் பாபா சித்திக் நடத்திய ரம்ஜான் இப்தார் விருந்தில் இரு நடிகர்களும் பங்கேற்று கட்டி பிடித்துக் கொண்டிருந்தாலும், சண்டைக்கு பிறகு முதல்முறையாக சல்மான் வீட்டிற்கு ஷாருக் இப்போதுதான் வந்துள்ளார். சல்மான் வீட்டின் கவுரவ உறுப்பினர் பட்டியலில் ஷாருக்கும் இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இருபெரும் நடிகர்களும் பிறந்தநாள் பார்ட்டியில் பிரிந்து, திருமண நிகழ்ச்சியில் ஒன்றிணைந்துள்ளது, பாலிவுட் வட்டாரத்தில் இருவரின் நலம் விரும்பிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவ்விரு நடிகர்களின் ரசிகர்களும் குஷியில் கொண்டாடி வருகின்றனர்.
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top