அண்ணனை வைத்து இயக்கிய அஞ்சாத படத்தை நம்பி ஓவராக பேட்டி கொடுத்து பஞ்சராகிக் கிடக்கிறார் வேட்டைக்காரர். மொத்த டியூனை அஞ்சாத படத்திலேயே இறக்கிவிட்டதால் அடுத்த படத்திற்கான டியூனை கத்துக்கொண்டு இருக்கிறாராம்.
அண்ணனோட அஞ்சாத படம் ’டர்ர்ர்ர்’ என்று ப்ளீம் ரோலோடு அறுந்து விட்டதால் அஞ்சாத இயக்குநரோடு அடுத்த படத்தில் இணைவதா..? வேண்டாமா..? என்று தம்பி இப்போ ரொம்பவே யோசிக்கிறாராம். அண்ணனும் "பார்த்து பண்ணு"ன்னு அட்வைஸ் பண்ணியிருக்காராம்.
படத்தை தயாரிப்பதாக இருந்த பசுமை ஸ்டூடியோவும் கிரீன் சிக்னல் காட்டவில்லையாம். தம்பிக்காக கதை தயார் செய்து கொண்டு காத்திருக்கிறார் இயக்குநர். அவர் ஓகே சொன்னால்தான் அதைக் காட்டி பைனான்ஸ் வாங்க முடியும் என்பது பிரதர்ஸ்சின் தற்போதைய நிலைமை.
.............................................................................................................
https://www.facebook.com/pages/Tamil-Excellent-News/920381617976801
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment