வாட்ஸ் அப்பில் ஆபாசக் காட்சியைப் பரப்பியது கேரள காவல்துறையின் தென்மண்டல ஏ.டி.ஜி.பி. என்று சரிதா நாயர் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். வெளியே வந்ததும் அவர் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி என்பவர் மீது பாலியல் புகார் கூறினார்.
மேலும் தன்னுடன் நெருக்கமாக இருந்த அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவலை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறினார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சரிதா நாயரின் ஆபாச படங்கள் இணைத்தளங்களில் வெளியானது. வாட்ஸ்அப்புகளிலும் பரவியது. வாட்ஸ் அப் மூலம் பரவிய இக்காட்சிகள் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி சரிதாநாயர் பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் இது பற்றி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணை தொடங்கியதும் சரிதாநாயரின் ஆபாச காட்சிகளை செல்போனில் ‘டவுன்லோடு’ செய்து பார்த்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என தகவல் பரவியது.
இதனால் சரிதாநாயரின் ஆபாச காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்தவர்கள் அதனை அவசரமாக அழித்தனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை டி.ஜி.பி. பாலசுப்பிரமணியன் அலுவலகத்திற்கு சரிதாநாயர் திடீரென சென்றுள்ளார்.
டி.ஜி.பி.யிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், கேரள மாநிலத்தில் தென் மண்டல ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் பத்மகுமார், முன்பு திருவனந்தபுரம் சரக ஐ.ஜி.யாக இருந்த போது தான் நான் கைது செய்யப்பட்டேன். அப்போது என்னிடம் இருந்து 7 செல்போன்கள், 2 லேப் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போது ஒரு லேப்டாப்பும், 4 செல்போன்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டன. மீதி 3 செல்போன்களும், ஒரு லேப்டாப்பும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த லேப்டாப்பில் தான் என்னுடைய ஆபாச காட்சி இருந்துள்ளது. எனவே அது வெளியில் கசிந்து வாட்ஸ் அப்பில் பரவ அப்போதைய போலீஸ் ஐ.ஜி. பத்மகுமார் தான் காரணமாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன்.
இது தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரிதா நாயர் கூறியுள்ளார். காவல்துறை ஏ.டி.ஜி.பி. பத்மகுமார் மீது சரிதாநாயர் புகார் கூறியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment