↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பல அமெரிக்க அரசியல் தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிக அமெரிக்க ஃபேன்ஸ் உள்ளனர். ஃபேஸ்புக்கில் அதிக அளவில் வெளிநாட்டு ஃபேன்ஸ் உள்ள தலைவர்களில் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார். தனது நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த சோஷியல்பேகர்ஸ் என்ற நிறுவனம் அளித்த தகவலின்படி தி நியூயார்க் டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு,

புதன்கிழமை வரை மோடிக்கு ஃபேஸ்புக்கில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 529 ஃபேன்ஸ் உள்ளனர். பெரும்பாலான அமெரிக்க அரசியல் தலைவர்களை விட மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிகமான அமெரிக்க ஃபேன்ஸ் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தியதால் அவருக்கு ஃபேஸ்புக்கில் ஏராளமான ஃபேன்கள் கிடைக்க காரணம்.

நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பல அமெரிக்க தலைவர்களும் கலந்து கொண்டனர். மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோடியுடன் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்ட அமெரிக்க தலைவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

என்ன தான் மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிக அமெரிக்க ஃபேன்ஸ் இருந்தாலும் ஏராளமான இந்தியர்கள் தான் அவரது ஃபேஸ்புக் ஃபேன்ஸாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஃபேஸ்புக் ஃபேன்களில் 1 கோடியே 50 லட்சம் பேர் அமரிக்கர்கள், மீதமுள்ள 3 கோடியே 70 லட்சம் பேர் அமெரிக்கா அல்லாத நாட்டவர்கள். ஃபேஸ்புக்கில் அதிக வெளிநாட்டு ஃபேன்கள் வைத்திருக்கும் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஒபாமா தான்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top