விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் கத்தி படத்தையடுத்து சிம்பு தேவன் படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே.
100 கோடி பட்ஜெட்டில் உருவாகிவிருக்கும் இந்த படத்திற்காக விஜய் 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
கன்னட நடிகர் சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். நட்டி என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment