↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியை இந்திய அணி வென்றதன் மூலம் கேப்டன் டோணி 3 சாதனைகள் படைத்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா தான் விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று நடைபெற்றது. இன்றைய போட்டியில் இந்தியா அயர்லாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
உலகக் கோப்பை போட்டியில் அதிகபட்சமாக 11 போட்டிகளில் வென்ற கேப்டன் என்ற கபில் தேவின் சாதனையை டோணி முறியடித்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் 12 போட்டிகளில் வென்ற கேப்டனாக ஆகியுள்ளார் டோணி.
வெளிநாடுகளில் நடந்த சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகமாக 58 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த சவ்ரவ் கங்குலியின் சாதனையை டோணி(59 வெற்றிகள்) இன்று முறியடித்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து 9 போட்டிகளில் வென்ற இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் டோணி. முந்தைய மற்றும் தற்போதைய உலகக் கோப்பை தொடர்களை சேர்த்து மொத்தம் 9 போட்டிகளில் டோணி தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றி பெற்றுள்ளது.
2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் கங்குலி தலைமையிலான அணி தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை டோணி தலைமையிலான அணி முறியடித்துள்ளது.
இந்தியா மீண்டும் உலகக் கோப்பையை வென்றால் கோப்பையை தக்க வைத்துக் கொண்ட முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை டோணி பெறுவார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment