தடம் பதித்தவர்கள் நிகழ்ச்சியில் இந்த வாரம் 'கமல் ஹாசன்'
வேந்தர் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் வித்தியசமான நிகழ்ச்சி 'தடம் பதித்தவர்கள்' இந்த நிகழ்ச்சியில், சமுதாயத்தில் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாய் நுழைந்து சாதனை படைத்து, வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டும் விதமாக வாழ்க்கையில் உயர்ந்தவர்களைப் பற்றி விவரிக்கும் ஆவணப்படமாக ஒளிபரப்பாகிறது.
முதலில் பல்வேறு தொழில் துறைகளில் சாதனை படைத்தவர்களைப் பற்றிய தொகுப்பாக ஒளிபரப்பாகிய இந்த 'தடம் பதித்தவர்கள்' நிகழ்ச்சி, கடந்த பல வாரங்களாக திரைப்பட சாதனையாளர்களின் திரையுலகப் பயணத்தையும் வாழ்க்கை வரலாற்றையும் தொகுத்து வழங்கி வருகிறது. முதலில் எம்.ஜி.ஆர். பிறகு ரஜினிகாந்த், அடுத்து சிவாஜி என ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் இடம் பெற்றிருக்கிறார்.
கமலின் திரையுலகப் பயணம் எப்படி தொடங்கியது? கமல் திரையுலகில் தன் திறமைகளை எப்படி வளர்த்துக் கொண்டார்? சிறுவனாக நடிக்கத் தொடங்கி, டான்ஸ் உதவியாளராய் பணியாற்றி, சிறுவேடங்களில் நடித்து, இன்று உலக நாயகனாய் உயர்ந்து விளங்குவதன் ரகசியம் என்ன? என்பவை பற்றியும் கமலின் வாழ்க்கையில், திரைப்பயணத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றியும் நேயர்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு, ஒளிபரப்பாகிறது.
ஞாயிறுதோறும் பகல் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இதன் மறு ஒளிப்பரப்பு அடுத்த வரும் சனிக்கிழமை ஒளிப்பரப்பாகும். அரிய தகவல்களும் திரையுலகப் பிரபலங்களின் பேட்டிகளும் அடங்கிய இந்த நிகழ்ச்சி, ஒரு கலைப்பொக்கிஷயமாக விளங்கி வருகிறது.
0 comments:
Post a Comment