‘லிங்கா’ படத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய வரிவிலக்கு தொகையை ரஜினியும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் ஏமாற்றி விட்டதாக ஒரு வழக்கு போடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை போட்டிருப்பவர் லிங்கா பிரச்சனையில் சிக்கி விக்கல் எடுத்துக் கொண்டிருக்கும் சிங்காரவேலனும், அவரது சகாக்களும்தான். இந்த மனுவில் லிங்கா தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ரஜினிக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்த சிங்காரவேலன், அந்த போராட்டத்தை நடத்த முடியாதளவுக்கு ஒரு கிடுக்கிப்பிடி போட்டிருந்தார் லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ரஜினியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிற விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்று கர்நாடகா நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த புதிய வழக்கு.
பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் இந்த வழக்கு, ரஜினிக்கு சாதகமாக முடியுமா? பாதகமாக முடியுமா? என்று உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு அதிரடி திருப்பம். இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞர் பாலி நாரிமன் ரஜினிக்காக வாதாட வருகிறாராம். இவர் கையிலெடுக்கும் வழக்கெல்லாம் அவர் பக்கமே வெற்றி என்கிற நிலையில் பல லட்சம் பீஸ் கொடுத்து அவரை அழைத்து வந்திருக்கிறார் ரஜினி.
ரஜினி கொடுத்திருக்கும் அந்த பல லட்சம் பீஸ், சிங்காரவேலனை பீஸ் பிடுங்குமா? காத்திருங்கள்… கவுன் டவுன் ஸ்டார்ட்!
பின்குறிப்பு- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையிலிருந்த போது அவருக்காக வாதாடி உலகமே வியக்கும் வண்ணம் உடனடியாக ஜாமீன் பெற்றுத்தந்தவர்தான் இந்த பாலி நாரிமன்.
0 comments:
Post a Comment