↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பத்திரிகையாளரை கண்டபடி திட்டிய விராட் கோஹ்லி மீது ஐசிசியில் புகார் அளித்துள்ளது ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை. மேலும், ஆஸ்திரேலிய சட்டப்படி கோஹ்லி மீது நடவடிக்கை எடுக்க முயலவும் அப்பத்திரிகை முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக, வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்திய வீரர்கள்.
நேற்றைய வலைப் பயிற்சி முடிந்ததும், ஓய்வு அறைக்கு நடந்து சென்றார் இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லி. அப்போது எதிரே நின்ற இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில பத்திரிகையின் நிருபர் ஜஸ்விந்தர் சித்துவை பார்த்து கண்டபடி திட்டினார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அனுஷ்கா ஷர்மாவுடனான கோஹ்லியின் காதல் குறித்து அந்த பத்திரிகை முன்பு ஒருமுறை எழுதிய கட்டுரைக்காக இந்த திட்டு என்று பிறகு அந்த பத்திரிகையாளருக்கு தெரியவந்தது. இருப்பினும் எழுதிய ரிப்போர்ட்டரை விட்டுவிட்டு தவறுதலாக அதே பத்திரிகையின் வேறு ரிப்போர்ட்டரை திட்டியது கோஹ்லி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வேறு பத்திரிகையாளர் மூலமாக, ஜஸ்விந்தர் சித்துவிடம் மன்னிப்பு கேட்டார் கோஹ்லி. ஆனால் இந்த விவகாரத்தை சீரியசாக கையில் எடுத்துள்ளது இந்துஸ்தான் டைம்ஸ்.
இதுகுறித்து அதன் விளையாட்டு பிரிவு எடிட்டர் சுக்வந்த் பஸ்ரா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "எங்கள் பத்திரிகையின் தலைமை எடிட்டருடன் சம்பவம் குறித்து பேசியாகிவிட்டது. அவரது வழிகாட்டுதலின்பேரில், கோஹ்லிக்கு எதிராக, ஐசிசி, பிசிசிஐ அமைப்புகளில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய சட்டப்படி, பத்திரிகையாளரிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதற்கு எதிராக வழக்கு தொடர முடியுமா என்பது பற்றி அந்த ஆங்கில பத்திரிக்கை ஆய்வு செய்துவருவதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
Home
»
kholi
»
sports
»
sports.tamil
» நிருபரை திட்டிய கோஹ்லி மீது ஐசிசியில் புகார்... வழக்கும் தொடர முடிவு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment