எனவே வரும் 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் தகுதி சுற்று ரக்பி போட்டி ஒன்றை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விளையாட்டை இளைஞர்களின் மத்தியில் பிரபலப்படுத்த இந்த போட்டிக்கு பிராண்ட் அம்பாசிடர் ஒருவரை நியமனம் செய்யவும் மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதன்படி இந்த விளையாட்டு போட்டிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயன் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் 'ரக்பி செவன் டீம்' என்ற அணிக்கு பிராண்ட் அம்பாசிடராக செயல்படவுள்ளார். சிவகார்த்திகேயன் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட இந்திய அணி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment