தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக அதிகமாக நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் தனுஷ் சேர்ந்துள்ளார். அனேகன் படத்தில் அவர் நான்கைந்து கதாபாத்திரங்களில் நடித்தாலும் நடித்தார், அந்தப் படம் சம்பந்தமான அனைத்து டிவி நிகழ்ச்சிகளிலும், வீடியோ பேட்டிகளிலும் இன்னொரு தேசிய விருது வாங்கும் அளவிற்கு நடித்துத் தள்ளி விட்டார். சமூக வலைத்தளங்களில் தனுஷின் பேட்டிகள் பற்றிய பேச்சுத்தான் கடந்த சில வாரங்களாக இருந்து வந்தது.
அதே போல், அவருடைய அனேகன் படத்திற்கும் அவரே பிஆர்ஓ வேலையையும் சேர்த்துப் பார்த்திருந்தார். அந்தப் படம் எவ்வளவு வசூல் ஆனது என்று ஒவ்வொரு நாளும் வசூல் கணக்கை வெளியிட்டுக் கொண்டேயிருந்தார்.
எந்தப் படத்திற்காக அவர் அனேகன் படத்தை பிப்ரவரியில் வெளியிட சொன்னாரோ அந்தப் படம் அனேகன் படத்தை விட அட்டகாசமான வசூலில் அள்ளிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அனேகன் படத்தை காட்டிலும் காக்கி சட்டை படம் வசூலை வாரி குவித்து வருகிறது. சிவகார்த்திகேயனை வளர்த்து விட்ட தனுஷே நினைத்தாலும் கூட இனி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை ஒன்றும் செய்ய முடியாது என்றாகிவிட்டதாம். அதற்கு அனேகன், காக்கி சட்டை படங்களின் வசூலை உதாரணமாகச் சொல்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.
0 comments:
Post a Comment