↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களிடம் மைதானத்தில் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவது சாதாரண விஷயம். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரரிடம் முந்தியடித்து ஆட்டோகிராப் வாங்குவார்கள். ஆனால் இனி அவ்வாறு ஆட்டோகிராப் வாங்க முடியாது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் மூத்த விசாரணை அதிகாரி கே. எஸ். மாதவன் கூறுகையில்,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் ஐபிஎல், டி20 உள்ளிட்ட போட்டிகளின்போது வீரர்கள் யாருக்கும் ஆட்டோகிராப் போடக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது போன்று புக்கிகள் அவர்களிடம் முக்கிய தகவல்கள் அளிக்கக்கூடும். இதை தடுக்கவே இந்த புதிய உத்தரவு.
ஆட்டோகிராப் நோட்டை கொடுப்பது போன்று புக்கிகள் வீரர்களிடம் இத்தனை ரன்கள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்துவிடலாம்.
ஸ்டேடியத்தில் ஏஜெண்டுகளை வைத்து ரன்களை தெரிந்து கொள்கிறார்கள். அண்மையில் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது ஸ்டேடியத்தில் இருந்து சில புக்கிகள் வெளியேற்றப்பட்டனர். இந்தியாவிலும் அது போன்று செய்ய புக்கிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் தங்கி அவர்களுடன் மைதானத்திற்கு சென்று ஆட்டம் முடியும் வரை அங்கு இருந்து நடப்பதை பற்றி அறிக்கை அளிப்பது என் வேலை. ரஞ்சிக் கோப்பை போட்டிகளின்போது தான் புக்கிகளால் வீரர்களை எளிதில் சந்திக்க முடிகிறது.
புக்கிகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் வீரர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் புக்கிகளை தவிர்த்து வருகிறார்கள் என்றார் மாதவன்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment