நடிகர், நடிகைகள் ஒரே இடத்தில் கூடி ஆபாசமாக பேசுவது, காமெடிகள் சொல்வது, கலந்துரையோடுவது என்கிற ‘ஏ.ஐ.பி ரோஸ்ட் ஷோ’ நிகழ்ச்சி மும்பையில் பிரபலமாகி வருகிறது.
மும்பையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.ஐ.பி.ரோஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அனைவரின் முன்பு, தீபிகாவை கட்டியணைத்து, ரன்வீர் சிங் முத்தமி்ட்டார். இதற்கு, தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கிற்கு ஒத்துழைப்பு தந்தார்.
ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியில் இதுபோன்ற செயல்கள், வரம்பிற்கு மீறிய செயல் என்று கூறி, முன்னணி வக்கீல் ஒருவர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, ரன்வீர்சிங், தீபிகா படுகோனே மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஜூன் கபூர், சோனாக்ஷி சின்கா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், இம்மாதம் 2ஆம், தீபிகா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், வரும் 16ஆம் தேதி வரை, தீபிகாவை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 comments:
Post a Comment