நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டியில் யுவராஜ் சிங்கின் இடத்தில் 5வது வீரராக சுரேஷ் ரெய்னா களமிறங்கியுள்ளார்.
ஆனால், சொற்ற ஓட்டங்களில் அவர் விக்கெட்டை பறிகொடுப்பதை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா மீது எழுந்துள்ள விமர்சனம் குறித்து டோனி கருத்து தெரிவிக்கையில், இந்திய அணியை பொறுத்தவரை 5வது விக்கெட்டாக களமிறங்குபவர்கள் தொடர்ந்து சோபிக்க முடியாமல் போகிறது.
யுவராஜ்சிங், சிறப்பாக செயல்பட்டாலும் தற்போது அவரது இடத்தில் ரெய்னா சிறப்பாக ஆடி வருகிறார். இதற்கு முன்பு விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா போன்ற வீரர்கள் கூட ஐந்தாவதாக களமிறங்கியுள்ளனர்.
ஆனால் அவர்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. ஏதோ ரெய்னா மட்டுமே அப்படி ஆட்டமிழப்பதாக ஊடகங்கள் கூறிவருகின்றன.
தற்போதைய நிலையில் 5வது வீரராக சிறப்பாக ஆடிவரும் ரெய்னாவின் தன்னம்பிக்கையை யாரும் குலைத்துவிடக் கூடாது.
தேவையான ஓட்டங்களை விரைவாக அடித்துவிட்டுதான் அவர் ஆட்டமிழக்கிறார்.
40வது ஓவர்களுக்கு மேல் களமிறங்கும் வீரர்களால் அதிக ஓட்டங்களை எடுப்பது இயலாத காரியம். குறைந்த பந்துகளில் அதிக ஓட்டங்கள் அடிப்பது மட்டுமே அந்த சூழலில் அவர்களின் நோக்கமாக இருக்கும்.
இக்கட்டான சூழலில் களமிறங்கி மிக விரைவாக 20 முதல் 25 ஓட்டங்கள் எடுப்பது சாதாரண விடயம் அல்ல. அதற்காக அந்த வீரர்களை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment