லிங்கா படத்தில் நடித்து அந்தப்படம் வெளியானதிலிருந்தே பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.. ’
லிங்கா’படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்து விட்டோம் என்று ஒவ்வொரு நாளும் போராட்டங்கள், நடத்தி வந்தனர் விநியோகஸ்தர்கள். ரஜினி இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு மெகா பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர்.
பிறகு இந்த பிரச்சினையில் நடிகர் சரத்குமார் தலையிட்டு ரஜினியிடம் பேசி உங்களுக்கு ஒரு நல்ல முடிவை தருவதாக சொன்னார். அதன் காரணமாக மெகா பிச்சை எடுக்கும் போராட்டம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில், ஆர்.சிங்காரவடிவேலன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டில், ஆர்.சிங்காரவடிவேலன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஐகோர்ட்டில், ஆர்.சிங்காரவடிவேலன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரராக உள்ளேன். நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தின் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதி விநியோகம் உரிமத்தை பெற்றேன். ஆனால், இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து, எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு, இழப்பீடு வழங்கும்படி படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரிடம் முறையிட்டோம். எந்த பயனும் இல்லை. இதற்கிடையில், கடந்த ஜனவரி மாதம் பத்திரிகையாளருக்கு பேட்டியளித்த ராக்லைன் வெங்கடேசன், லிங்கா படத்தின் மூலம் தனக்கு லாபம் கிடைத்ததாகவும், இப்போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கும்படி தனக்கு ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் லிங்கா படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது. ரஜினிகாந்தின் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வரிவிலக்கு சலுகை பெறப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் தமிழில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தால், தமிழ் கலாசாரத்தை வளர்க்கும் விதமாக இருந்தால், வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், லிங்கா என்பது தமிழ் பெயர் இல்லை. இது சமஸ்கிருத வார்த்தையாகும்.
மேலும், லிங்கா படத்தின் கதை தமிழ் கலாசாரத்தை மேம்படுத்தும் விதமாக இல்லை. எனவே, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசனும், ரஜினிகாந்தும் தகுதியில்லாத படத்துக்கு வரிசலுகை பெற்று, அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் கடந்த 3-ந் திகதி புகார் செய்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனுவை வக்கீல்கள் எஸ்.ஜோயல், ஜி.விஜயகுமார் ஆகியோர் நேற்று தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment