↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இப்போதோ இணையத்தில் நிச்சயத்தில் அதே வேகத்தில் விவாகரத்துக்கும் விண்ணப்பித்து விடுகின்றனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் 18,500 தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்கு வரன் தேடி அலைந்து ஒரு வழியாக லட்சக்கணக்கில் செலவழித்து திருமணம் செய்து கொள்ளும் கேரளமாநில மக்கள், சின்னச் சின்ன கருத்துவேறுபாடுகள், புகைச்சலுக்கு கூட ஒத்துப்போக முடியாமல் விவாகரத்துக் கோரி நீதிமன்றப் படியேறுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
18,500 தம்பதிகள்
கேரளாவில் முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருந்தது. தற்போது விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அங்கே விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.18 ஆயிரத்து 500 தம்பதிகள் விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள் என்பதைக்கொண்டே இதனை புரிந்து கொள்ளலாம்.
28 குடும்பநல நீதிமன்றங்கள்
கேரளாவை பொறுத்தவரை கணவன்-மனைவி இடையேயான குடும்ப பிரச்சினை மற்றும் விவாகரத்து பிரச்சினைகளை தீர்க்க 28 குடும்ப நல நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் 18 ஆயிரத்து 500 தம்பதிகள் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து காத்து இருக்கிறார்கள்.
உயர்நீதிமன்ற தகவல்
கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டு ஒருவர் மனு செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்து உயர்நீதிமன்றம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எர்ணாகுளத்தில் அதிகம்
மலையாள தேசத்தின் சினிமா நடிகைகளில் பெரும்பாலானவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். எர்ணாகுளம் நகரில் மட்டும் ஆயிரத்து 739 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இல்லற வாழ்க்கை
இல்லற வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு. திருமணம் முடித்த ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டும், விட்டுக்கொடுத்தும் வாழ்ந்தால் இல்லற வாழ்க்கையில் எளிதாக வெற்றிக்கனியை பறித்துவிடலாம். ஆனால் இன்றைக்கு அன்பும் அறனும் இல்லாத இல்லற வாழ்க்கையாகி வருகிறது.
எதிர்மறை எண்ணங்கள்
இல்லற வாழ்வை தொடங்கும் தம்பதியர் எதிரும் புதிருமாக நடந்து கொண்டால் இல்லறம் நல்லறமாக இருக்காது. சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக அமைந்துவிடும். இந்த சூழ்நிலை சமீப காலமாக தம்பதிகளிடையே அதிகரித்து வருகிறது.
இளையதலைமுறையினர்
இதற்கு சந்ததிகள் மாற்றம், சமுதாய வளர்ச்சி, சந்தர்ப்ப சூழ்நிலைகள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவைகளையும் மிஞ்சி இல்வாழ்க்கையில் வெற்றிபெறும் தம்பதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினரிடையே விவாகரத்து என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்றாக மாறிவருவது உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய ஒன்று என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment