கடந்த 2013ம் ஆண்டு இலங்கை அணி அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
இதன் முதல் டி20 போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. வார்னர் அதிகபட்சமாக 90 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் 138 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.5 ஓவரிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பெரேரா (33), மேத்யூஸ் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர்.
விசித்திர சிக்சர்:-
முன்னதாக இலக்கை நோக்கி களமிறங்கிய தொடக்க வீரர் டில்ஷானுக்கு மிட்செல் ஸ்டார்க் பந்து வீசினார்.
அந்த பந்தை கண்ணை மூடிக் கொண்டு ஃபைன் லெக்கில் அடித்தார். அது நம்ப முடியாத வகையில் கீப்பருக்கு பின் புறம் சென்று சிக்சராக விழுந்தது. பின்னர் இந்த நம்ப முடியாத சிக்சரை ரசிகர்கள் கொண்டாடினர்.
0 comments:
Post a Comment