உலக நாயகன் கமல்ஹாசன் தனது இணையதள காணொளி காட்சி மூலமாக மருதநாயகம், வாமமார்கம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். சில பத்திரிகைகளும், விமர்சகர்களும் இரண்டும் ஒரே கதை என்றும், வெவ்வேறு கதை என்றும் பல செய்திகள் வெளிவரும் நிலையில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் தான் இந்த விளக்கத்தை அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மருதநாயகம், வாமமார்கம் கதைகள் இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா? என பல ஆயிரம் கேள்விகள் தன்முன் வந்துள்ளதாகவும், ஆனால் இரண்டு கதைகளையும் தன்னால் கூற முடியாது என்றும் கமல் கூறியுள்ளார். மருத நாயகம் கதையை நான் சொல்லாவிட்டாலும் நீங்கள் பல புத்தகங்களில் இருந்து படித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும், அந்த கதையை நான் எப்படி உங்களுக்கு கூறப்போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது' என்றார். தனது நண்பர் பி.சி.ஸ்ரீராம் தன்னிடம் பேசியபோது, 'காந்தி, நேரு என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மருதநாயகத்தை எத்தனை பேருக்கு தெரியும், இது சரியாக வருமா? என்று கேட்டார். அவருக்கு நான் சொன்ன பதில் இப்போது மருதநாயகம் பெயரை தற்போது பலர் தெரிந்திருக்காவிட்டாலும், எனது படம் ரிலீஸாகும் முன்போ அல்லது ரிலீஸ் ஆன பின்னரோ கண்டிப்பாக எல்லோரும் தெரிந்து கொண்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். அதேபோல், வாமமார்கம் என்பது எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு கதை. சர்வதேச தரத்தில் இருக்கும் இந்த கதையின் டைட்டில் தமிழ் பெயராக இல்லையே என்று ஒருசிலர் கூறியுள்ளார்கள். இனி நாம் உலக அளவில் படமெடுக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. தமிழ்ப்படமாக இருந்தாலும் அது உலக ரசிகர்களுக்கு செல்ல வேண்டுமானால் அதற்குரிய டைட்டிலைத்தான் வைக்க வேண்டும்' என்ற கருத்தில் உடன்பாடு கொண்டவன் நான். ராபர்ட் கிளைவ், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் குறித்து படமெடுக்க வேண்டுமானால் அவர்களுடைய பெயரைத்தான் பட டைட்டிலாக வைக்க வேண்டுமே தவிர அதற்குரிய தமிழ் பெயரை தேடிக்கொண்டிருக்க கூடாது' என்று கூறியுள்ளார்.
மருதநாயகம், வாமமார்கம் இரண்டு படங்களையும் மிக விரைவில் தொடங்கவிருப்பதாகவும், அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கமல் மேலும் கூறியுள்ளார்.
|
மருதநாயகம் - வாம மார்கம். உலக நாயகனின் விளக்கம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment