உலகின் முதல்முறையாக விளம்பரப்படம் ஒன்றிற்கு பார்வையற்ற ஒருவர் போட்டோகிராபராக பணிபுரிந்துள்ளார். இந்த விளம்பரத்திற்கு பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு பிரபல வாசனை திரவிய நிறுவனம் ஒன்று புதுமையான முறையில் விளம்பரப்படத்தின் போட்டோஷூட் எடுக்க முடிவு செய்தது. அதன்படி முதன்முதலாக உலகில் பார்வையற்ற போட்டோகிராபர் ஒருவரை பயன்படுத்தி இந்த போட்டோஷூட் எடுக்க முடிவு செய்தது. இதன்படி பவேஷ் பட்டேல் (Bhavesh Patel) என்ற பார்வையற்ற போட்டோகிராபரை ஒப்பந்தம் செய்து இந்த விளம்பர படத்தை தயார் செய்துள்ளது.
இந்த படத்திற்காக போஸ் கொடுத்ததில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், அவரை நான் Visually Impaired Person (VIP) என்ற கோணத்தில் பார்க்கவில்லை என்றும் Very Important Person (VIP) என்ற கோணத்தில்தான் பார்த்ததாகவும் கேத்ரீனா கைப் கூறியுள்ளார். மேலும் பார்வையுள்ள ஒருவர் விளம்பர படம் எடுக்க என்ன சம்பளம் வாங்குவாரோ அதே சம்பளத்தை பவேஷ் பட்டேலுக்கு கொடுத்துள்ளதாகவும், புகைப்படங்கள் அனைத்துமே மிகச்சிறப்பாக வந்துள்ளதாகவும் வாசனை திரவிய நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பார்வையற்ற ஒருவரை பயன்படுத்தி புதிய சாதனை செய்த அந்த நிறுவனத்திற்கும் அதில் நடித்த காத்ரீனா கைப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
0 comments:
Post a Comment