கணினியின் செயல்பாடுகளில் Processor மற்றும் RAM முக்கியமானவையாக திகழ்கிறது. இவற்றின் அளவை பொறுத்து கணனியின் செயல்பாடு அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
நமது பயன்பாடுகளுக்கு ஏற்ப Processor மற்றும் RAM ஆகியவற்றின் திறனை மாற்றிக்கொள்வது, கணினியின் இயங்குதிறன் அதிகரிக்க வழிவகுக்கும்.
நமது Processor மற்றும் RAM அதிக அளவில் இருந்தும், கணனியின் செயல்பாடு குறைவாக இருந்தால் நினைவகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பயன்பாடுகளை Defragment செய்யவேண்டியது அவசியம்.
Defragment என்பது கணனியில் பல்வேறு இடங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளையும், துண்டு துண்டாக ஆங்காங்கே இருக்கும் பல்வேறு ஃபைல்களையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக நினைவகத்தில் சேமித்து வைக்கும் ஒரு முறை.
1) கணினியில் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து, சர்ச் ஆப்ஷனை தெரிவு செய்து, அதிலே Disk Defragmenter என டைப் செய்யலாம்.
2) Start -> All Programs ->Accessories -> System Tools -> Disk Defragmenter என்ற வழியிலும் தேர்வு செய்யலாம்.
பின் அங்கே தோன்றும் Disk Defragmenter பெட்டியில் உள்ள Current status என்ற பிரிவின் கீழே உள்ள கணனியின் நினைவக பிரிவுகளான சி, டி, இ போன்றவற்றை தெரிவு செய்து, Defragment Disk என்ற பட்டனை கிளிக் செய்து, Defragment செய்யலாம்.
இந்த முறையை அடிக்கடி செய்து வரும் போது உங்கள் கணனியின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நன்றாக தெரியும்.
0 comments:
Post a Comment