தமிழ் சினிமாவிற்கு என்றும் புதிய படைப்புகளை கொண்டு வருபவர் கமல். இவர் இயக்கத்தில் பூஜை போட்டு 75 % மேல் எடுக்கப்பட்ட படம் மருதநாயகம்.
இப்படம் இன்று வெளிவராத நிலையில், இப்படத்தை ஒரு தொழிலதிபர் தயாரிக்கவிருப்பதாக சில வாரங்களுக்கு முன் செய்திகள் கசிந்தது.
இதை தொடர்ந்து கமல் மீண்டும் வாமமார்க்கம் என்று ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது. இவை இரண்டிற்கும் கமல் தன் யு-டியுப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் ‘'மருதநாயகம்', 'வாமமார்க்கம்' இரண்டும் வேறு படமா? அல்லது ஒரே படமா? கதை என்ன? என்று கேட்கிறார்கள். இரண்டு கதைகளையும் சொல்ல முடியாது.
ஆனால், கண்டிப்பாக இப்படத்தை நீங்கள் திரையில் காண்பீர்கள், மேலும் வாமமார்க்கம் என்பது தமிழ் பெயர் இல்லை, அதற்கு தமிழாக்கமும் தேவையில்லை. ஏனெனில் ஷேக்ஸ்பியரை ஷேக்ஸ்பியர்னுதான் சொல்லணும். அதுக்கு தமிழாக்கம் கண்டுபிடிக்கக் கூடாது. ராபர்ட் கிளைவ் இந்தியாவுக்கு வந்த கதையை படமாக எடுக்கிறேன் என்றால் ராபர்ட் கிளைவ் என்றுதான் பெயர் வைக்கவேண்டும். அதற்கு தமிழில் பெயர் வைக்கக்கூடாது.’ என்று
0 comments:
Post a Comment